fbpx

ஆட்டோ ஸ்டாண்டில் ஏற்பட்ட தகராறு.. ஆட்டோ ஓட்டுனருக்கு அரிவாள் வெட்டு…!

சென்னை விருகம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில் குடியிருப்பவர் சேகர் (35). இவர் வடபழனி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டான்டில், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும், ஆட்டோ டிரைவர் பரணி என்பவருக்கும், ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்கனவே தகராறு இருந்து வந்தள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பரணி உடனே தனது நண்பர்களை வரவழைத்து சேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேகரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் வெட்டுபட்டு பலத்த காயமடைந்த சேகரை அங்கிருந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வடபழனி காவல்துறையினர், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் பரணி மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

இனி இதையெல்லாம் செய்யக்கூடாது..மாணவர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை..!

Tue Jul 19 , 2022
பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது,சாலையில் கோஷமிட்டு ஊர்வலமாக போவது ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொது இடங்களில், மக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, அனைத்து கல்லூரிக்கு செல்லும் பேருந்து வழித்தடங்களிலும் […]
நாளை முதல் 144 தடை உத்தரவு..!! கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

You May Like