fbpx

குழந்தையை பார்க்க வந்த முதல் கணவனுக்கு தடை.. 2-வது கணவனை அரிவாள் வெட்டு.!

சென்னை புதுப்பேட்டை பகுதியில் சாலையோரமாக முகமது பாஷா (26) என்பவர் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வயதில் மூத்த பெண்ணான அமுதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப தகராறில் பாஷா குடித்துவிட்டு வந்து அமுதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதில் விரக்தியடைந்த அமுதா, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனது சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஓராண்டுக்கு முன், தேனாம்பேட்டை பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான சக்கரை (32) என்பவரை அமுதா 2வது திருமணம் செய்துகொண்டார்.

முதல் கணவர் மூலம் பிறந்த அந்த 2 குழந்தைகளையும் தனது சித்தியிடம் விட்டுவிட்டு, சக்கரை முகமது வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். தனது 2 குழந்தைகளையும் அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ள நிலையில், அது இரண்டாவது கணவருக்கு பிடிக்கவில்லை. முகமது பேச்சை மீறி, முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகளை பார்க்க தொடர்ந்து சென்றதால் அமுதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அமுதாவை சரமாரியாக அவர் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து சக்கரை மற்றும் முகமதுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சக்கரை முகமதுவை கற்களால் தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதனால் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் அங்கேயே மயங்கி கிடந்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முதல் கணவரை  தேடி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக மனைவியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Rupa

Next Post

சரக்கு பாட்டில்களை ஆட்டைய போட, ஓட்டைய போட்ட நபர்கள்

Tue Nov 8 , 2022
திருவண்ணாமலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திருடுவதற்காக கடையின் சுவரில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடு மங்கலம் கூட்ரோட்டிலிருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வடபுழுதிவுர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அண்ணாமலை,வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையில் டாஸ்மாக் […]

You May Like