திருச்சியை சார்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணிபுரிந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகிய நிலையில், நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே அந்த பழக்கம் காதலாக மாறியது. அதன் பிறகு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவ்வப்போது அந்த இளைஞர் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில், ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து சொந்த ஊருக்கு சென்று விட்டார் அதன் பின்னர் வெகு நாட்களுக்குப் பிறகு காதலனால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அந்த பெண் உணர்ந்து கொண்டார்.
காதலனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் தன்னுடைய தாயார் உடன் தன்னுடைய காதலன் மீட்டருக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட காதலன் மற்றும் அவர்களை குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி விரட்டி அடித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இளம் பெண் வழங்கிய புகாரின் அடிப்படையில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறை ஆய்வாளர் லதா இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து ஏமாற்றிய காதலன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.