அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள் மீது விசாரணை. ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கு, நான்காண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடத்தப்பட்டன. ராஜஸ்தான் பீகார் மேற்கு வங்காளம் உத்தர பிரதேசம் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.
சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் நடந்தன. இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை, வரும் 15ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.