டெல்லி திகார் சிறையில் பிரபல ரவுடி சுனில் தாஜ்பூரியா அவருடைய எதிரி கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சமயத்தில் குறைந்தது 10 காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள் என்பது தற்போது அம்பலம் ஆகியிருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை ரவுடி சுனில் மான் என்ற தில்லு தாஜ்பூரியா அவருடைய எதிரிகளால் திகார் சிறையில் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது சிறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதோடு தாஜ் பூரியாவை காவல்துறையினர் கொண்டு கட்டாக தூக்கி சென்று தரையில் போடுவதையும், கொலையாளிகள் அவரை தாக்கி கொலை செய்வதையும் இந்த சிசிடிவி காட்சிகளில் பார்க்க முடிகிறது. தாஜ்பூரியாவின் எதிரியான மற்றொரு ரவுடி ஜிதேந்தர் கோகியின் கூட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் துண்டா, தீபக் தீத்தர் உள்ளிட்ட இருவரும் தாஜ் பூரியாவை தாக்க தொடங்கி இருக்கிறார்கள். மேலும் காவல்துறையினரை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்திருக்கிறார்கள்.
அந்தப் பகுதியில் நின்றிருந்த ஒரு காவலர் கூட தாஜ் சூர்யாவை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அந்த காவல்துறையினர் எல்லோரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து திகார் சிறை நிர்வாகம் இதுவரையில் ஒரு உதவி கண்காணிப்பாளர் உட்பட 9 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.
இதற்கு முன்னதாக தாஜ்பூரியா சிறையின் தரைதளத்தில் அடைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவருடைய எதிரிகளான யோகேஷ், தீபக், ராஜேஷ் ரியாஸ் கான் உள்ளிட்டோர் முதல் தளத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இரவில் தங்களுடைய சிறை கம்பிகளை உடைத்துவிட்டு கீழ் தளத்திற்கு வந்து இருக்கிறார்கள் மேலும் தாஜ் பூரியா இருந்த அறையின் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்து அவரை காலால் உதைத்தும், இரும்பு கம்பியால் அடித்தும் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு குறிப்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மண்டோலி சிறையிலிருந்து 2 வாரங்களுக்கு முன்னர் தான் திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றவாளிகள் அதே சிறையில் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பிகார் சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.