ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எதிர்வரும் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்யவிருக்கின்றார்.
இதில் பங்கேற்றுக் கொள்வதற்கு சென்னையிலிருந்து விமான மூலமாக ஸ்டாலின் கோவை அவருக்கு சேர்ந்தார் கோவை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இதனை அடுத்து விமான நிலைய சிறப்பு நுழைவாயில் அருகே காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்கள் வழங்கிய புத்தகங்களை பெற்றுக் கொண்டார். விமான நிலையம் சாலை முழுவதிலும் முதலமைச்சருக்கு மேளதானங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.
அங்கிருந்து கார் மூலமாக ஈரோடு சென்ற முதல்வர் சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை 9 மணி அளவில் ஈரோடு சம்பத் நகரில் பரப்புரை ஆரம்பித்த அவர், அதன் பிறகு பெரிய வலசு பாரதி தியேட்டர் சாலை, பேருந்து நிலையம் மஜித் வழியாக வாக்கு சேகரித்து விட்டு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பேச உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கே.எம். கே சாலை மூலப்பற்றவை வழியாக பிராமண பெரிய அக்ரஹாரம் சென்று அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதன் பிறகு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கும் அவர் மாலை 3 மணி அளவில் முனிசிபால் காலனியில் உரையாற்றிய பின்னர் பன்னீர்செல்வம் பூங்கா வழியாக பெரியார் நகர் சென்று மாலை 3 45 மணியளவில் தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றார்.
இதற்கு நடுவே 12 மணியளவில் குருசாமி கவுண்டர் மண்டபத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையன் காடு வலசு, மணிக்கூண்டு மூலமாக பெரியார் நகர் ஆர்ச் அருகே பிரச்சாரத்தை முடித்து வைக்கிறார்.