தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு நாட்கள் செல்ல, செல்ல அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 100க்கும் குறைவாக இருந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் 300ஐ தாண்டி உள்ளது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல, மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வாரத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலையில் இந்த மருத்துவமனையில் நோய் தொற்று சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த விதத்தில் கோவை அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் மூன்று பேர் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.