fbpx

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் கோவை, நீலகிரியில்.. கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்..!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட வானிலை அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டத்துடன் கானப்படும், மேலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும்,நாளையும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Baskar

Next Post

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு என்ன..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Sun Jul 10 , 2022
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”சாலை விபத்துகளில் காயம் அடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் […]
4,307 செவிலியர் காலிப்பணியிடங்கள்..!! ’எல்லாம் ரெடியா இருங்க’..!! ’அமைச்சர் சொன்ன குட் நியூஸ்’..!!

You May Like