சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரவில் காவல் துறையினர் ரோந்து பணியை மேற்கொள்வதில்லை எனவும், இதன் காரணமாக, அந்த வழியாக இரவில் செல்லும் நபர்களிடம் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்டவை அதிகம் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
அதேபோல சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காதலர்கள் சந்தித்து பேசும்போது, அவர்களிடம் கொள்ளை முயற்சியில் சில மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி தரும் விதமாக இருந்தது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் இளங்களை பட்டப்படிப்பு படித்து வந்த ஒரு காதல் ஜோடி, நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் குண்டுகுளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பகுதியில் பெரிதாக ஆள் நடமாட்டம் இருக்காது என்று சொல்லப்படுகின்றது. ஆனாலும் அந்தப் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த மர்ம கும்ப கும்பல் காதல் ஜோடி தனியாக செல்வதை பார்த்திருக்கிறார்கள்.
சற்று தூரத்தில் இருந்த காதல் ஜோடியை சிறிது நேரம் சென்ற பிறகு நெருங்கி சென்ற 4 பேர் கொண்ட அந்த மரும கும்பல், கத்தியை காட்டி மிரட்டி இருவரிடமும் இருந்த பணம், கைபேசி உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர். அதோடு, மது போதையின் உச்சத்தில் இருந்த அந்த மர்ம கும்பல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அதோடு, இதனை வெளியில் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி சென்றுள்ளனர்.
பிறகு அந்த மாணவியை வீட்டில் இறக்கி விட்ட காதலன், தன்னுடைய உறவினர் மூலமாக காவல் நிலையத்தில் இது குறித்து புகார் வழங்கியுள்ளார். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் முகக் கவசம் அணிந்திருந்ததால் யாரையும் அடையாளம் காண இயலவில்லை. ஆனாலும் சம்பவம் நடைபெற்ற போது அந்த சம்பவத்தில் ஈடுபட்ட எல்லோரும் விமல் என்ற பெயரை அடிக்கடி உச்சரித்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு, அந்த பகுதியில் இருந்த விமல் என்ற நபரை காவல்துறையினர் தேடி சென்ற போது அந்த நபர் தப்பிக்க முயற்சித்தார். ஆனால் அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து, அந்த நபரை வைத்து மற்ற மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.