என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் இது போன்ற குற்றங்கள் தமிழகத்தில் குறைவதாக தெரியவில்லை.
அந்த வகையில், கடலூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 6ம் வகுப்பு சிறுமிக்கு பள்ளி தாளாளரும் திமுகவின் கவுன்சிலர் பக்கிரிசாமி பாலியல் தொல்லை வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பக்கிரிசாமி நீக்கப்படுவதாக திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில்,பக்கிரிசாமி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதோடு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.