fbpx

நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? எங்கிட்டயேவா… டாஸ்மாக் ஊழியரின் தலைக்கு வந்த கேடு…!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவரபாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று வீரபாண்டிப் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மது அருந்த டாஸ்மார்க் சென்றுள்ளாா். அப்பொழுது பாண்டியராஜன் மது அருந்தும் போது டாஸ்மாக்கில் வாங்கிய சுண்டலுக்கு பணம் தரவில்லை என கூறப்படுகிறது.

டாஸ்மார்க்கில் வேலை செய்யும் அங்குசாமி என்பவர் வாங்கிய சுண்டலுக்கு பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அப்போது வீரபாண்டியில் நான் எவ்வளவு பெரிய ஆள் என்று தெரியுமா? என்னிடம் பணம் கேட்கிறாயா என பாண்டியராஜன் அங்குசாமியை மிரட்டினார். அதற்கு அங்குசாமி பயப்படாமல் பணத்தை வைத்துவிட்டு மறுவேலை பார் என்று சொலியதால் பாண்டியராஜன் பணத்தை கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

பின்பு எட்டு மணி அளவில் தனது நண்பன் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு டாஸ்மாக்குக்கு வந்த பாண்டியராஜன் அங்குசாமியிடம் சண்டை சன்டை போட்டுள்ளார். சண்டையின் போது டாஸ்மார்க்கில் வேலை செய்யும் அங்கு சாமிக்கு தலையில் அருவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த அங்குசாமி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் பாண்டியராஜன் மற்றும் அவருடைய நண்பன் இருவருக்கும் பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

’அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது’..! சொல்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!

Sat Jul 9 , 2022
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து மாற்று எரிவாயுவுக்கு நகர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பெட்ரோல், டீசல் எரிவாயுக்களில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் நவீன திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சர் […]
’அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது’..! சொல்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!

You May Like