ஜெயலலிதாவின் உயிரிழப்பிற்குப் பிறகு முதல்வரான ஓபிஎஸ் எந்த நிமிடத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தாரோ, அந்த நொடியே அவருக்கு தமிழக அரசியலில் வரவேற்பு குறைய தொடங்கிவிட்டது.
அதன் பிறகு தர்மயுத்தம் என்ற பெயரில் அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் ,எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றிணைந்து நான்காண்டு காலம் ஆட்சியை நடத்தி இருந்தாலும் அவருக்கான அரசியல் எதிர்காலம் மங்கியே காணப்பட்டது.
இந்த நிலையில் ,எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவித்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் அந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது, இதனால் ஓபிஎஸ் தரப்பு மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறது.
தற்போதும் கூட சற்றேற குறைய ஓபிஎஸ் அரசியல் களத்தில் தனித்துவிடப்பட்டிருக்கிறார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியிருக்கின்ற நிலையில், பன்னீர் செல்வத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று யோசித்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எங்களுக்கு எந்தவிதமான பின்னடைவும் கிடையாது என்று சொல்கிறது ஓபிஎஸ் தரப்பு.
இந்த நிலையில், மறுபடியும் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கிறார் பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞர் திருக்குமரன். ஆனாலும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தாலும் கூட உச்சநீதிமன்ற தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்படலாம் என்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
உச்சநீதிமன்றம் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு தீர்ப்பு வழங்கி விட்டால் அந்த வழக்கு அவ்வளவுதான் யாருக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறதோ அவர் தான் முன்னிலையில் இருப்பார் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் உச்ச நீதிமன்றம் மீண்டும், மீண்டும் ஒரு தீர்ப்பை சொல்கிறது என்று சொன்னால் அந்த தீர்ப்பு எத்தனை முறை உச்ச நீதிமன்றத்தால் வாசிக்கப்படுகிறதோ அத்தனை உறுதியானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
தமிழக அரசியல களத்தில் தன்னுடைய பலத்தை முழுவதுமாக இழந்து விட்ட பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இணைந்து சசிகலா துணையுடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அரசியலில் ஈடுபடலாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
தற்சமயம் சற்று ஏறக்குறைய தனித்து விடப்பட்டிருக்கின்ற பன்னீர்செல்வம் முதலில் பொதுமக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள். சில மூத்த பத்திரிக்கையாளர்கள் தற்சமயம் பன்னீர்செல்வத்தின் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்ற ஜூன் மாதம் போல கூண்டோடு நிர்வாகிகள் பலர் பன்னீர்செல்வத்தின் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சென்றால் பன்னீர்செல்வத்தின் நிலை இன்னும் மோசமாகும் என்றும் கூறப்படுகிறது.