விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் என்ற கிராமத்தில் வசித்து வரும் சீனிவாசன், தாய்ப்பால் தம்பதிகளுக்கு நாகமுத்து(41), தைமுத்து(37), மாரிமுத்து(34) மற்றும் வீரமுத்து என்று 4 மகன்கள் இருக்கின்றன. கடைசி மகனான வீரமுத்துக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது வீரமுத்து சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வாரம் ஒரு முறை சொந்த கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீரமுத்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவருடைய வீட்டருகே அவரை வழிமதித்த சில மர்ம நபர்கள் தலை மற்றும் கைகளில் பயங்கரமாக வெட்டியதில் படுகாயம் அடைந்தார். வீரமுத்து அவரை மீட்ட பொதுமக்கள் அவசர உறுதியின் உதவியுடன் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர் இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து செஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் வீரமுத்துவின் உடன் பிறந்த அண்ணன் மாரிமுத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அத்துடன் காவல்துறையினரின் விசாரணையில் தன்னுடைய மனைவிக்கு வீரமுத்து பாலியல் தொல்லை வழங்கியதால் கொலை செய்ததாக மாரிமுத்து காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். தம்பி வீரமுத்துவை கொலை செய்ய ஆட்களை அனுப்பிய அவர் எதுவும் தெரியாதது போல அவசர உறுதி ஏறி வீரமுத்துடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.