பிரபல விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா உள்ளிட்ட மெகா தொடர்களின் இயக்குனர் டேவிட் இவர் முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மெகா தொடரை தான் இயக்கி வந்தார்.
அதன் பிறகு பாரதிகண்ணம்மா என்ற மெகா தொடரை இயக்க தொடங்கினார். பாரதி கண்ணம்மாவும் சரி, பாண்டியன் ஸ்டோர்ஸும் சரி ஆரம்பத்தில் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றனர். இந்த 2 தொடர்களால் அந்த டிவியின் டிஆர்பி எக்கச்சக்கமாக அதிகரித்தது.
ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரை பொறுத்தவரையில் தொடக்கத்தில் முல்லையாக நடித்திருந்த நடிகை சித்ரா அவர்களின் மரணத்திற்கு பிறகு அந்த தொடரின் கதைக்களம் மெல்ல, மெல்ல மாறத் தொடங்கியது.தற்போது ஏதோ பெயருக்கு அந்த தொடரை மக்கள் பார்த்து வருகிறார்கள்.
ஆனால் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் அனைத்து பிரச்சினைகளையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுவார் இயக்குனர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.
ஆனாலும் பாரதிக்கு ஒட்டுமொத்த உண்மையையும் தெரிந்த பின்னரும் கூட இந்த தொடர் நீண்டு கொண்டே செல்கிறது. பாரதியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று தெரிவித்து விட்டு கண்ணம்மா தன்னுடைய இரு குழந்தைகளுடன் அவருடைய தந்தையின் கிராமத்திற்கு சென்று விட்டார்.அவரைத் தேடி கண்டுபிடிப்பதற்காக அலையும் பாரதி அலைந்து, திரிந்து ஒரு வழியாக அந்த கிராமத்திற்கும் சென்று விட்டார்.
ஆனால் இந்த தொடரின் ரசிகர்கள் இந்த தொடரின் கதைக்களம் இப்படி மாறும் என்று சற்றும் எதிர்பார்த்து இருக்க வாய்ப்பில்லை.. கதையை ஒரு முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடிக்கும் இயக்குனரை சமூக வலைதளவாசிகள் தற்போது அதிகமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இயக்குனர் டேவிட் சமீபத்தில் தான் மூவேந்தர் திரைப்படத்தை பார்த்திருப்பார் போல என ட்ரோல் செய்யும் சமூக வலைதளவாசிகள், இந்த தொடரின் அடுத்த கட்ட நகர்வை அந்த திரைப்படத்திலிருந்து தான் காப்பி அடிக்கப்போகிறார் போல என்று காலாய்த்து தள்ளி வருகிறார்கள்.