fbpx

பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய, நான்கு குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது..!

கோவில்பட்டி அருகே யுள்ள கீழபாண்டவர் மங்கலத்தினை வசித்து வருபவர் மகேந்திரன் (42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஏமாற்றி, மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என்று இந்த மாணவியை மிரட்டியுள்ளார். யாரிடமாவது கூறினால் அந்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தினை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதனால் அந்த மாணவி இதுகுறித்து யாரிடமும் செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி வந்ததால் மாணவியை அவரது பெற்றோர் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று டாக்டரிடம் காட்டியுள்ளனர் மாணவியை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்து மாணவியை விசாரித்தபோது, பள்ளி மாணவிக்கு மகேந்திரன் இரண்டு வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Baskar

Next Post

அடி தூள்... ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனை தொகையில் 1% ஊக்கத்தொகை வழங்கப்படும்...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!

Wed Jul 6 , 2022
ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் குறிஞ்சி சந்தனம், வேம்பு, இயற்கை மூலிகை, குமரி கற்றாழை போன்ற குளியல் சோப்பு வகைகள் மக்களைக் கவரும் வண்ணம் உற்பத்தி செய்யப்பட்டு சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கேற்றவாறு சந்தையில் உள்ள இதர பொருட்களுக்கு இணையாக வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் […]

You May Like