தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் 22 வயதான மேகன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு மேகனின் பெற்றோர்கள் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க போகிறேன் என கூறி மோகன் அவரது பெற்றோர்களிடமிருந்து 250 ரூபாய் வாங்கி சென்றுள்ளார். அந்த பணத்தை வைத்து மதுபானம் வாங்கி அதில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன்பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மேகனின் தந்தை முருகன் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து, பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.