fbpx

சமையல் செய்யாத மனைவியை அடித்தே கொன்ற கணவன்…..! டெல்லியில் பயங்கர சம்பவம்….!

டெல்லி பல்ஸ்வா பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ராங்கி. கடந்த 3 வருடங்களுக்கு முன்னால் இவருக்கும், ப்ரீத்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்ததுஇந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆறு மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது 3 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் நாள்தோறும் மது குடித்துவிட்டு வந்து மனைவி ப்ரீத்தியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தம்பதிகள் இடையே ஏற்படும் சண்டைகள் அனைத்தையும் இருவருடைய வீட்டைச் சார்ந்தவர்களும் சமாதானம் செய்து வைத்து வந்துள்ளனர். குழந்தை பிறந்த நாள் முதல் ப்ரீத்திக்கு அடிக்கடி உடல் குறைவு ஏற்பட்டது வந்திருக்கிறது. ஆகவே பிரதியால் முன்பை போல வீட்டு வேலைகளை கவனிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது.

இதனால் தம்பதிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இத்தகைய நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் கணவர் பஜ்ராங்கி உச்சகட்ட குடிபாதையில் வீட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகின்றது. உடல்நல பிரச்சனையின் காரணமாக, ப்ரீத்தி சமையல் செய்யாமல் ஓய்வெடுத்துள்ளார். வீட்டில் சாப்பாடு இல்லாததால் பஜ்ரங்கி கடுமையான கோபத்திற்கு ஆளானார்.

இதனால் சமைக்காமல் இருந்த மனைவியை குச்சியால் அடித்துள்ளார். வீட்டை விட்டு ஓடினால் மது போதையில் குழந்தையை கணவர் கொலை செய்து விடுவாரோ என்ற பயத்தில் ப்ரீத்தி 6 மாத பெண் குழந்தையை இறுக கட்டி அணைத்துக் கொண்டு நகராமல் இருந்துள்ளார். குடிபோதையில் பஜ்ரங்கி கொடுமையாக தன்னுடைய மனைவியின் மீது நடத்திய தாக்குதலில் வலி தாங்க முடியாமல் பிரீத்தி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

அவர் மயங்கி விழுந்து நீண்ட நேரம் ஆன பின்னரும் எழும்பாததைக் கண்டு பயந்து போன அவருடைய கணவர் பஜ்ராங்கி தன்னுடைய மாமியாரை அழைத்து வந்து பார்க்க செய்து இருக்கிறார். இந்த நிலையில் ப்ரீத்தியை உறவினர்கள் எல்லோரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது அனுமதித்துள்ளனர். அங்கே ப்ரீத்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ப்ரீத்தியின் சடலத்தைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அவருடைய கணவர் பஜ்ராங்கி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. குடிபோதைக்கு அடிமையான தந்தையின் ஆக்ரோஷம் காரணமாக, தாயை இழந்த 6 மாத கைக்குழந்தை தவிப்பிற்குள்ளாகி இருப்பது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

புற்றுநோய் உள்ளிட்ட அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கு முழுமையான வரி விலக்கு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..

Thu Mar 30 , 2023
வெளிநாடுகளில் இறக்குமதி செய்யும், புற்றுநோய் உள்ளிட்ட அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கு மத்திய அரசு முழுமையாக வரி விலக்கு அளித்துளது. அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘பெம்ப்ரோலிசுமாப்’ உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு, இறக்குமதி வரி வசூலித்து வரும் […]

You May Like