fbpx

கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி வந்த பெண்…..! உல்லாசத்தின் போது ஓயாமல் அழுத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (32). இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர் காடாம்பட்டியில் தங்கி செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி கலைவாணி(27) உள்ளிட்டோரும் தங்களுடைய ஒரு வயது பெண் குழந்தையுடன் வங்கி வேலை பார்த்து வந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், கலைவாணியுடன் மல்லேஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையிலே கள்ளக்காதலாக உருமாறி இருக்கிறது. ஆகவே அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த கள்ளக்காதல் ஜோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலைவாணியின் கைக்குழந்தையுடன் அந்த செங்கல் சூளையை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். அதன் பிறகு ஓமலூர் அருகே உள்ள செங்கல் சூலையில் கணவன் மனைவி என்று தெரிவித்து வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் இணைந்து மது குடித்துவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர் அப்போது குழந்தை அழுதுள்ளது. இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட இருவரும் குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குழந்தை அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டிருப்பதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலர்கள் இருவரிடமும் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இருவரும் போதையில் இருந்த போது குழந்தை அழுததால் சுவற்றில் தூக்கி அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில், கலைவாணிக்கு ஏற்கனவே 3 கணவர்கள் இருந்ததும், அவர்களை பிரிந்து வந்து 4வதாக மல்லேஷுடன் குடும்பம் நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Post

பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா..? இந்த சூப்பர் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Tue May 9 , 2023
பாத்திரங்களை தேங்காய் நார், சாம்பல், மண் கொண்டு தேய்த்த காலம் போய் சோப்பு, லிக்விட் என மாறிவிட்டது. இருப்பினும் இந்த சோப்பு மற்றும் லிக்விடுகளை கொண்டு பாத்திரங்களை கழுவிய பின்பும் அதில் சோப்பு படிவம் தெரிகிறது. அந்த பாத்திரங்களை சமையலுக்கு அப்படியே பயன்படுத்துவது பல உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும். எனவே, அனைவரும் மீண்டும் இயற்கை வழியை பின்பற்ற முற்படுகின்றனர். அந்த வகையில், நீங்களும் பாத்திரக் கறைகளை அகற்ற சோப்பு, லிக்விடை […]
பாத்திரங்களை பளிச்சென்று மாற்ற வேண்டுமா..? இந்த சூப்பர் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

You May Like