fbpx

நீ சொன்னா கேக்குற ஆள் இல்ல கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்…..! தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபர்….!

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முறையைத் தவறிய உறவில் யார் இருந்தாலும், அவர்களுக்கு அந்த உறவே எப்போதாவது மிகப் பெரிய ஆபத்தாக வந்து நிற்கும் என்பதை பல சமயங்களில் நாம் அறிந்திருப்போம்.இது தொடர்பாக பல்வேறு செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்துள்ள குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கின்ற துரை(30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரின் மனைவியுடன் முறை தவறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை அறிந்து கொண்ட அந்த பெண்ணின் கணவர் தன்னுடைய மனைவியுடன் தொடர்பை கைவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் இதனை நெல்லையப்பன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களுடைய முறை தவறிய உறவு தொடர்ந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில், குறிச்சிகுளம் பகுதியில் ஒரு வாலிபரின் தலை துண்டிக்கப்பட்ட உடல் மட்டும் கிடந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தலை துண்டிக்கப்பட்ட உடலை கைப்பற்றி தலையை தேடும் பணியில் இறங்கினர். அப்போது தலை துண்டிக்கப்பட்ட உடல் கிடந்த சிறிது தூரத்தில் ஒரு தலை துண்டாக கிடந்திருக்கிறது.

உடல் மற்றும் தலை உள்ளிட்டவற்றை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதன் பிறகு தான் கொலை செய்யப்பட்டது யார் என்பது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் விசாரணையில் இந்த விவரங்கள் அனைத்தும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளையனுக்கு மற்றொரு பெண்ணுடன் இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினர் முடிவு செய்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, அடுத்த கட்ட விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

விவசாயிகளுக்கு இனி ரூ.8000 கிடைக்கும்.. 2023 பட்ஜெட்டில் வெளியாக உள்ள குட்நியூஸ்..

Fri Jan 27 , 2023
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு 4 மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும். […]
PM-Kisan..!! விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை..!! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

You May Like