fbpx

தந்தையை போலவே தமயன்….!முதலமைச்சரை புகழ்ந்த துரைமுருகன்…..!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா சென்னை நந்தனத்தில் இருக்கின்ற ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் ஸ்டாலின் இன்னும் பல பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கலைஞரைப் போலவே அவருடைய மகனான ஸ்டாலினும் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வருகிறார் என்று பாராட்டு கூறினார். ஸ்டாலின் கட்சி தலைவர் மற்றும் வராமல் நாட்டின் தலைவர் எனவும் துரைமுருகன் புகழாரம் சூட்டினார்.

அதோட இந்திரா காந்தி ஆட்சியில் அவரிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் யார் குடியரசுத் தலைவர் என கேள்வி எழுப்பபோது, எனக்கு தெரியாது கருணாநிதியிடம் கேளுங்கள் என இந்திரா காந்தி தெரிவித்தார். அதே போல இந்திய தலைவர்கள் ஸ்டாலினை தலைமை ஏற்க வேண்டும் என்று அழைப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு உரையாற்றும்போது சிறப்பான கூட்டணியை அமைத்து தொடர்ந்து 4️ தேர்தலில் வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் ஸ்டாலின் என்று பாராட்டு தெரிவித்தார். அடுத்த நகர்வு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியதாகத்தான் இருக்க வேண்டும் எனவும் டி ஆர் பாலு கூறியிருக்கிறார்.

Next Post

வருமானவரித்துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்……!

Thu Mar 2 , 2023
தொழிலதிபர் சேகர் ரெட்டி அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ,சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015-16ஆம் மதிப்பீட்டு வருடத்திற்கு 20 லட்சம் ரூபாயும 2017-18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமானவரித் துறையின் இந்த நோட்டீஸின் மீது […]

You May Like