fbpx

இத்தாலியில் வரலாறு காணாத கடும் வறட்சி காரணமாக, அவசரநிலை பிரகடனம்…!

இத்தாலியில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஐந்து பிராந்தியங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் கடுமையான வெயில் அங்குள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

கடுமையான வெயிலின் காரணமாக காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சியை அந்த நாடு சந்தித்து வருகிறது. குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த வறட்சியின் தாக்கத்தால், இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் அதிகமான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் விவசாயச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மிகவும் மேசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள லோம்பார்டி, எமிலியா-ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய ஐந்து வடக்கு பிராந்தியங்களில், இத்தாலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இது குறித்து இத்தாலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசர நிலை தற்போதைய சூழ்நிலையை அசாதாரண வழிமுறைகள் மற்றும் அதிகாரங்களுடன் நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைமை சீரடையாத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Baskar

Next Post

#BREAKING: மாநிலங்களவை உறுப்பினராகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.... பிரதமர் மோடி மகிழ்ச்சி பதிவு

Wed Jul 6 , 2022
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா என்றால் தெரியாதவர்களே இல்லை. 1975 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுவரை மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருப்பவர் அவர். தமிழ் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். இளையராஜா 1981 தமிழக அரசின் கலைமாமணி விருதும், 1988 ஆம் […]

You May Like