தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அவரவர்கள் அவரவர் முடிவை மேற்கொள்வதில் தெளிவாக இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் தெளிவாக முடிவெடுத்து செயல்பட்டாலும் பெற்றோர்களின் குறுக்கீடு காரணமாக, எல்லோரும் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
தர்மபுரி அருகே பழைய தர்மபுரி சின்னதோப்பு பகுதியைச் சேர்ந்த வேலு மகன் சத்ரியன்(25). இவர் சம்பா கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், 17 வயதான ஒரு இளம் பெண்ணை அவர் காதலித்து வீட்டை விட்டு மே மாதம் சென்றுள்ளார். அந்த சமயத்தில் பெண்ணின் தாய் தன்னுடைய மகளை காணவில்லை என்று வழங்கிய புகாரின் அடிப்படையில், தர்மபுரி அனைத்து மகளிர் காவல் துறையைச் சார்ந்தவர்கள் சத்ரியனை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதனையடுத்து ஜாமினில் வெளிவந்த சத்ரியன் அவர் காதலித்த அந்தப் பெண் தருமபுரி பேருந்து நிலையத்தில் கல்லூரிக்கு சென்றபோது அந்த பெண்ணை தொந்தரவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று காலை தர்மபுரியையடுத்துள்ள ஆலங்கரை செல்லும் பாதையில் இருக்கின்ற மின்வாரிய அலுவலகம் அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் அவர் உயிரிழந்து கிடந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் துறையை சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சத்ரியன் உயிரிழப்பு தொடர்பாக மர்மம் இருப்பதாக தெரிவித்து அவருடைய உறவினர்கள் உடலை வாங்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் ராஜராஜன் போன்ற உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை மூலமாக சமாதானம் செய்தார்கள். இதனை தொடர்ந்து சத்ரியன் 4 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கின்றனர்.
அந்த கடிதத்தில், நாம் காதலித்தபோது, நாம் வீட்டை விட்டு சென்றுவிடலாம். என்னை அழைத்துச் சென்று விடு என சொன்னதால் நான் உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டேன்.
ஆனால் தற்சமயம் திருமணம் செய்து கொண்ட நம்மை பிரித்து வைத்து விட்டார்கள். நீயும் உன்னுடைய அம்மா பேச்சைக் கேட்டு இப்படி மாறுவாய் என்று நான் கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. நான் காதல் மனைவியை நினைத்து தற்கொலை செய்து கொள்கிறேன் ஐ லவ் யூ என்று குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சத்ரியன் எழுதி வைத்திருந்த கடிதம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் அதோடு தர்மபுரி பகுதியில் இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.