fbpx

மும்பைக்கு கடத்திச் சென்று, சிறுமைக்கு நடந்த அட்டூழியம்…போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது…!

உத்தரபிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து, கியான்பூர் மாவட்ட அதிகாரி புவனேஷ்வர் பாண்டே கூறுகையில், 14 வயது சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கடத்தி சிறுமியை வலுக்கட்டாயமாக மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அந்த நபர், மேலும் மற்றொரு நபர்ருடன் சேர்ந்து, ஐந்து மாதங்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார்.

பிறகு அந்த கொடூர கும்பலின் பிடியில் இருந்து சிறுமி தப்பித்து வந்தார். ஜூன் 27 அன்று சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை காவல்துறையிடம் கூறியதை தொடர்ந்து, குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேர் மீது ஐபிசி மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று பாண்டே கூறினார். மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததாக அந்த அதிகாரி கூறினார். இந்த வழக்கில் தொடர்புடைய 23 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குற்றம் சுமத்தப்பட்ட மற்ற இரண்டு பேரை, தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Baskar

Next Post

தம்பியின் உடலை மடியில் கிடத்தி அமர்ந்திருந்த சிறுவன்... ஆம்புலன்சுக்கு பணம் இல்லாத கொடுமை....!

Mon Jul 11 , 2022
மத்திய பிரதேச மாநிலம் அம்பா பத்ரா கிராமத்தில் வசித்து வருபவர் பூஜாராம் யாதவ். இவரின் இரண்டு வயது இரண்டாவது மகன் ராஜாவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. எனவே சிறுவனை அவனது தந்தை பூஜாராம் மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களுடன் சிறுவனின் அண்ணன் எட்டு வயது குல்சன் மருத்துவமனைக்கு சென்றான். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு சிறுவன் ராஜாவை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுவன் […]

You May Like