fbpx

காதலியின் திருமணத்தால், காதலனின் வெறிச்செயல்!, காதலிக்கு நேர்ந்த கொடூரம்..!

மதுரை விராட்டிபத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன் இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியில் வசித்து வருபவர் பாண்டி இவருடைய மூத்த மகள் அபர்ணா (19). பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் அபர்ணாவும் ஹரிஹரனும் காதலித்து வந்துள்ளனர். சிறிது காலம் கழித்து அபர்ணா ஹரிஹரனை விட்டு விலகியதாக தெரிகிறது. இதற்கிடையில் ஹரிஹரன் அபர்ணாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அபர்ணாவின் தந்தை பாண்டி தனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பமில்லை என்று மறுத்துள்ளார்.

இதை தொடர்ந்து ஹரிஹரன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவை தொல்லை செய்துள்ளார். இதனால் அபர்ணா வீட்டில் உள்ளவர்களிடம் இந்த தகவலை கூறியுள்ளார். எனவே பாண்டி தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தார். இந்நிலையில் அடுத்த மாதம் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இது தெரிந்த ஹரிஹரன் ஆத்திரமடைந்தார். தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்து, நேற்று மதியம் அபர்ணா வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அபர்ணாவின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாததால் அபர்ணா மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹரிஹரன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவிடம் தகராறு செய்தார். அதற்கு அபர்ணா சம்மதிக்காததால், ஆத்திரத்தில் கத்தியால் அபர்ணாவின் கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அப்பொழுது வீட்டிற்கு வந்த அபர்ணாவின் தாயும் சித்தப்பாவும் ஹரிஹரன் தங்கள் வீட்டில் இருந்து ஓடியதை பார்த்து, அவரை பிடிக்க முயன்றனர் ஆனால் அவர்களை தள்ளி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார் ஹரிஹரன். அவர் கொண்டு வந்த பை மட்டும் அவர்களிடம் சிக்கியது. அதில் கத்தி சுத்தியல் கையுறை போன்றவை இருந்தன. உடனே அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர், அங்கு அபர்ணா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதை அறிந்த எஸ் எஸ் காலனி இன்ஸ்பெக்டர், பூமிநாதன் தலைமையில் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அபர்ணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நேற்று முன்தினம் ஹரிஹரன் அபர்ணாவின் வீட்டிற்கு வந்து தனக்கு அபர்ணாவை திருமணம் செய்து கொடுக்குமாறு தகராறு செய்தார். ஆனால் அபர்ணாவின் வீட்டில் உள்ளவர்கள், அவரை சத்தம் போட்டு திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த தகவலை முன்பே காவல்துறையில் புகார் அளித்து இருந்தால், இந்த கொலை நடந்திருக்காது என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஹரிகரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அப்ப பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Baskar

Next Post

பெங்களூரில் பதுங்கி இருந்த அல்-கொய்தா தீவிரவாதி கைது...!

Sat Jul 9 , 2022
வங்காளதேசத்தை சேர்ந்தவர் பைசல் அகமது. இவர் அல்-கொய்தா அமைப்பின் தீவிரவாதி ஆவார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டில் வங்காளதேசத்தை உள்ள எழுத்தாளர் ஒருவரை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் பைசல் அகமது உள்பட மூன்று பேருக்கு வங்காளதேச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஆனால் பைசல் அகமது வங்காளதேசத்தில் இருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து அசாமில் வசித்து வந்தார். பிறகு பெங்களூருவுக்கு வந்து பொம்மனஹள்ளியில் வாடகைக்கு, வீடு […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like