நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டை மேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், என சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் கூறியதாவது, உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களின் உயிர்நாடி என்றும், நானும் உள்ளாட்சி பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறேன். மக்களுக்காக பணி செய்வதற்கான வாய்ப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிடைத்துள்ளது.பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது சாதாரணமான விஷயம் அல்ல. அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டம் நாமக்கல் மாவட்டம்.
கல்வியியல் தலைசிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டம் தற்போது திமுகவின் கோட்டையாக மாறி இருக்கிறது.
பெரியார், அண்ணா, கருணாநிதி போன்று, உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியாற்ற வேண்டும். உங்களின் ஒரு கையெழுத்து மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும். மக்களுக்கு தொண்டு செய்யவே அரசியலுக்கு வந்தேன். மிசா காலத்தில் அரசியலே வேண்டாம் என்று சிலர் எழுதி கொடுத்தபோது, நான் அப்படி எழுதிதர மறுத்தேன். தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் இந்த ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்களுக்கு நல்லது செய்வதால் என்னை மக்கள் வரவேற்கின்றனர், பாராட்டுகின்றனர்.மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்குவது தான் மிகவும் சிரமமானது. என்று கூறினார்.