தேனி மாவட்டம் போடியில் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 12 ஆம் படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு 16 வயதில் தாரணி என்ற மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் .
இந்நிலையில் தாரணி படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டு இருந்தார். இதேபோல் நேற்று முன்தினமும் இடைவெளி விடாமல் தொடா்ந்து செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடி உள்ளார். இதனால் கோபம் அடைந்த அவரின் பெற்றோர் தாரணியை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த தாரணி தனது அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். பெற்றோர்கள் அவள் தூங்கச் செல்வதாக நினைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை பெற்றோர் தாரினியின் அறைக்குள் சென்று பார்த்த போது தாரணி அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் கதறி அழுதனர்.
இத்தகவல் அறிந்த போடி டவுன் காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தை குறித்து தாரணி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போடி டவுன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.