fbpx

மே மாதம் 5ம் தேதி இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை….! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…..!

உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.. சென்ற 2 தினங்களும் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ஒவ்வொரு வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வரும் மே மாதம் 2ம் தேதி தேரோட்ட வைபவம் மே மாத 3ம் தேதியும் நடைபெற இருக்கிறது. அதோடு உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே மாதம் 5ம் தேதி நடைபெற இருக்கிறது.

இதனை முன்னிட்டு மதுரையில் மே மாதம் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அறிவித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Post

கொட்டி தீர்த்த கனமழை….! தென்காசியில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி……!

Tue Apr 25 , 2023
கோடை காலம் தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது வானிலை மாறி அவ்வப்போது பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், பகுதியில் காலைல இருந்து அதிக அளவில் வெயில் இருந்து வந்தது. இந்த நிலையில் இரவு நேரத்தில் சென்ற இரு தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. அத்துடன் […]

You May Like