இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகின்ற நிலையில், அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தோனிக்காகவே தமிழ் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை காண ஆர்வமாக செல்கிறார்கள். இந்த நிலையில், தோனி இந்த வருடம் ஐபிஎல் போட்டியோடு தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என்று சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிக் கொண்டுள்ளது.
ஆனாலும் அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவேன் என்று தோனியை ஒரு பேட்டியில் மறைமுகமாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் தோனியுடன் வெகு நாட்களாக கிரிக்கெட் போட்டியில் இணைந்து விளையாடிய சுரேஷ் ரெய்னா தற்போது தோனி நல்ல நிலையில் உள்ளதால் அவர் நிச்சயமாக அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று கூறியிருக்கிறார். தோனி நல்ல உடல் நிலையில் உள்ளதால் நிச்சயமாக அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடி சென்னை அணியை வழிநடத்தி செல்வார் என்று கூறியுள்ளார்.
அத்துடன் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு திறமையான வீரர். அவர் நிச்சயமாக இந்திய அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் நம்பிக்கை கூறியுள்ளார்.