fbpx

வீட்டிற்குள் வந்து காரியத்தை முடித்துவிட்டு… மிளகாய் தூளை தூவி சென்ற மர்ம நபர்கள்…!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் உள்ள தெற்கு வைத்திய நாதபுரம் தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால (75). தனியார் மில்லில் மேனேஜராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவரும், இவரது மனைவி குருபாக்கியம்(68) ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவரது மகன்கள் இருவருக்கும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கணவன், மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து விட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது இருவரும் தனித்தனி அறைகளில் இறந்து கிடந்துள்ளனர். அவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து அவர்களது உறவினர் ஜெயமணி கொடுத்த தகவல் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை பார்த்தபோது, இருவரின் வாய்ப் பகுதியில் ரத்தம் வடிந்ததாகவும். உடலிலும் காயங்கள் எதுவும் இல்லை என்பதால் இவர்கள் இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என கூறினார்கள்.

இந்த தகவல் பரவியதும் சம்பவம் நடந்த வீட்டை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடியதால், அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டின் பல்வேறு இடங்களில் மிளகாய் தூள் சிதறி கிடந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்டம் காவல்துறை சூப்பிரண்டு மனோகரன், ஶ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் துறை சூப்பிரண்டு சபரிநாதன், பயிற்சி துணை காவல் சூப்பிரண்டு சுதிர் போன்ற உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இரண்டு பேரின் இறப்பு சந்தேகத்திற்கு இடமாக இருப்பதால் முதற்கட்டமாக மோப்ப நாய் ராக்கி உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். இதனை அடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

கிடைத்த கேப்பில் சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி.. அடித்து துவைத்த மக்கள்...!

Sun Jul 17 , 2022
திண்டுக்கல் மாவட்டம், அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் அவரது மனைவி மற்றும் அவர்களின் எட்டு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் விட்டின் அருகில் உள்ள சிறுமிகளுடன் சேர்ந்து அங்குள்ள கோவில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சைக்கிளில் ஐஸ் மற்றும் சமோசா விற்றுக் கொண்டு, வேடசந்தூர் சாலைத்தெருவைச் சேர்ந்த முகமதுரபீக் (50) என்பவர் […]

You May Like