fbpx

சென்னை கோயம்பேட்டில் புதிய பூங்கா…..! தமிழக அரசின் சூப்பர் பிளான்……!

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி சென்னையில் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவது வடசென்னை கடற்கரைகளை வண்ணமயமான வசதிகளுடன் புதுப்பித்தல் பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம் இதன் பின்னர் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் பல வசதிகளுடன் கூடிய புதிய பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளது என்று கூறியிருக்கிறார்.

இந்த பூங்கா சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் அமையும் சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த பகுதியில் புதிய மருத்துவமனை சிகிச்சை மையம் ஒன்றும் தொடங்கப்பட இருக்கிறது அதேபோல 24 மணி நேர ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அரை அங்காடி நிர்வாக குழுவினருக்காக தனி வலைதளம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் எல்லாம் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது அதோடு இந்த திட்டத்திற்கு இந்த வருடமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளும் ஆரம்பிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் சேகர் பாபு.

Next Post

மீண்டும் பணிநீக்க நடவடிக்கையை கையிலெடுத்த சென்னை நிறுவனம்..!! ஊழியர்கள் கடும் அதிர்ச்சி..!!

Thu Apr 27 , 2023
மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருடாந்திர சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார மந்த நிலை, வர்த்தக சரிவு ஆகிவற்றால் செலவின குறைப்பு நடவடிக்கையை முன் வைக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் செலவின குறைப்பு, மறுசீரமைப்பு நடவடிக்கை என எந்த நடவடிக்கையை நிறுவனங்கள் எடுத்தாலும் அதில் முதல் விஷயமாக வருவது பணிநீக்கம் தான். அந்த வகையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் EdTech ஸ்டார்ட்அப் நிறுவனமான Skill-Lync பொருளாதார […]

You May Like