fbpx

சாப்ட்வேர் இன்ஜினியர் என்றதும் காதல் வலையில் விழுந்த பெண்கள்.. திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபர்…!

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் கூறி, எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.‌ இதுகுறித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த எட்டு பெண்கள், ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் மேட்ரிமோனியில் பதிவிட்டிருந்தார். குறிப்பாக திருமணமாகி விவாகரத்தான வசதி படைத்த பெண்களை மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு காதல் வலை வீசினார். அவர் கூறுயதை உண்மை என நம்பிய நாங்கள் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்த பிறகு சில மாதங்களில் எங்களிடமிருந்த விலை உயர்ந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்.

இது போல பல பொய்களை சொல்லி எட்டு பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்துள்ளார். சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் இப்போது கர்ப்பமாக உள்ளனர். எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை, பணத்தை ஏமாற்றிய சிவசங்கர் பாபு மீது குகட்பல்லி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் காவல் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் காவல்துறையினர் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மே 16 ஆம் தேதி கோண்டாப்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர் அடிக்கடி போவதை பார்த்து அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் ஆர்.சி.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பொழுதும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், இதற்கு மேலும் பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண்கள் கூறினர். பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் பறித்து மோசடி செய்துள்ளது. ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

இன்ஸ்டாகிராமில் தகாத வார்த்தையால் திட்டிய இளைஞரை... போட்டுத் தள்ளிய நண்பர்கள்...!

Thu Jul 14 , 2022
மைசூரு மாவட்டம் உன்சூர் டவுனில் வசித்து வருபவர் பீரேஸ்(23). அதே பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் மற்றும் அவரது நண்பர் மனு. இந்நிலையில் பீரேசுக்கும், நிதினுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீரேஸ், நிதினை இன்ஸ்டாகிராமில் தகாத வார்த்தைகளால் திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிதின், பீரேசை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம், நிதின் மற்றும் அவரது நண்பர் மனு இரண்டு […]

You May Like