fbpx

வட மாநிலங்களில் அதிகரிக்கும் மூடநம்பிக்கை….! கட்டிய மனைவியை கொலை செய்து சடலத்துடன் நிர்வாண பூஜை செய்த நபர்…….!

வட மாநிலங்களில் தற்ப்போது மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றனர். இந்த மூடநம்பிக்கை அதிகரிப்பதன் காரணமாக, யாருக்கு என்ன இழப்பு? என்று ஒரு கேள்வி பொதுமக்களிடையே எழலாம்.

மூடநம்பிக்கையால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாத வரையில் அதனை எதிர்ப்பது முறையல்ல. ஆனால் இந்த மூடநம்பிக்கையின் காரணமாக, ஒருவரின் உயிரே பரிபோகுமானால் நிச்சயமாக அதனை எதிர்த்து தான் ஆக வேண்டும்.

அந்த வகையில் ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் இருக்கின்ற அர்ஜான் என்ற இடத்தில் அம்பாவலாஸ் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் அஸ்தமா கருவா இவருக்கு மந்திர, தந்திர செயல்களில் தீவிர ஈடுபாடு உண்டு.

இந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமை சிவராத்திரி தினத்தன்று தன்னுடைய 35 வயது மனைவியான மம்தா கதுவாவை கணவர் கொலை செய்திருக்கிறார். அதோடு அன்றைய தின இரவில் மனைவியின் உடலை அருகே இருக்கின்ற காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்று நிர்வாண மாந்த்ரீக பூஜைகளை அவர் செய்திருக்கிறார். இதனை கொலையாளி அஸ்தமாவின் சகோதரர் சிவா நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

ஆகவே காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் அந்த பெண்ணை கொலை செய்த கணவர் அஸ்தமாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.

அதாவது இறந்து போன மம்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் கணவருடன் 3 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், முதல் கணவரை விட்டுவிட்டு பிரிந்து வந்த மம்தா அஸ்தமாவுடன் சேர்ந்து வாழ்ந்து இருக்கிறார். இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

மாந்திரீக பூஜைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட அஸ்தமா பெண்ணை பலி கொடுத்து நிர்வாண பூஜை நடத்த வெகுகாலமாகவே திட்டமிட்டு வந்திருக்கிறார். ஆனால் இந்த பூஜைக்கு வேறு பெண் கிடைக்காததால் தன்னுடைய மனைவியையே கொலை செய்து பூஜை செய்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

சூப்பர்..!! விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள்..!! ரெடியான ராக்கெட்..!! இஸ்ரோ முன்னாள் தலைவர் சொன்ன குட் நியூஸ்..!!

Tue Feb 21 , 2023
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ககன்யான் என்பது மனிதர்களை பாதுகாப்பாக விண்ணுக்கு அனுப்பி 7 நாட்கள் தங்கி சோதனைகள் செய்த பிறகு மீண்டும் பூமிக்கு திருப்பி வரும் திட்டமாகும். அதற்கான தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை விண்ணுக்கு ராக்கெட்கள் மூலம் செயற்கைகோள்களை மட்டுமே அனுப்பிவந்தோம். மனிதர்களை அனுப்பும் போது பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. […]

You May Like