fbpx

கோவிலில் உறங்கிக் கொண்டிருந்த பூசாரி எரித்துக் கொலை! நள்ளிரவில் துணிகரம் திருப்பூர் அருகே பரபரப்பு!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூட கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போதைய அளவிற்கு நடைபெறவில்லை.ஆனால் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன.

அதிலும் போதை பொருள் பழக்கம் தமிழக இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் போதை பொருளை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து, போதை பொருள் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான நடவடிக்கை தீவிர படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடாத சமயத்தில் கூட தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் இது போன்ற அறிவிப்பு வெளியானவுடன் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போதை பொருள் பழக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

இந்த நிலையில், திருப்பூர் வெங்கமேடு விபி சித்தன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(70). இவருடைய மனைவி பார்வதி இந்த தம்பதியினரின் மகன், மகள் உள்ளிட்டோருக்கு திருமணம் முடிந்து விட்டது. எல்லோரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

சுப்பிரமணி ஆத்துப்பாளையம் ஸ்ரீ கன்னிமார் கருப்பராயன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். வழக்கம் போல இரவு நேரத்தில் கோவில் வளாகத்திலேயே சுப்பிரமணி உறங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் நேற்று காலை கோவிலிலிருந்து ஒலிபெருக்கியின் மூலமாக பக்தி பாடல்கள் ஒளித்துக்கொண்டிருந்தனர். சுப்பிரமணியின் மகள் கௌரி கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால் கோவில் கதவு திறந்து கிடந்ததை தொடர்ந்து, கௌரி உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள், துணி உள்ளிட்டவை கலைந்து கிடந்திருக்கின்றன. கர்ப்பகிரகத்தின் பின்பகுதியில் சுப்பிரமணி முழுமையாக எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

தந்தை சடலமாக கிடப்பதை பார்த்து நிலைகுலைந்த கௌரி இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியன் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த கோவில் பகுதியில் இரவு நேரங்களில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையான பலர் சுற்றி திரிவதாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்த போதை ஆசாமிகளில் யாராவது பூசாரி சுப்பிரமணி உறங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய தலையும் கல்லைப் போட்டு கொலை செய்து, அதன் பிறகு உடலை எரித்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றன. திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் சி பிரபாகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தனிப்படை காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

Next Post

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனால் கடுப்பான நடிகர் அசோக் செல்வன்!

Sun Dec 18 , 2022
5 படங்கள் தோல்வி கண்டுவிட்டதாக தன்னை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை நடிகர் அசோக் செல்வன், குரைக்கும் நாய் குரைக்கட்டும் என பதில் விமர்சனம் செய்திருப்பது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம் மற்றும் நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்கள் ஃபிளாப் என யூ-டியூப் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை […]

You May Like