fbpx

பசுவின் கோமியம் லிட்டர் நான்கு ரூபாய்க்கு கொள்முதல்; சத்தீஸ்கர் அரசு புதிய திட்டம்…!

பசுவின் சாணத்தில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.143 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கோதன் நியாய் யோஜனா திட்டத்தில் சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு பசுவின் கோமியத்தை லிட்டர் நான்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டமானது ஜூலை 28-ஆம் தேதி மாநிலத்தில் நடைபெறவுள்ள ஹரேலி திருவிழா அன்று தொடங்க உள்ளது.

முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கால்நடை காப்பகங்கள் மூலம் பசுவின் கோமியத்தை அரசு கொள்முதல் செய்ய உள்ளது. பசுவின் கோமியத்தை குறைந்தபட்சம் லிட்டருக்கு நான்கு ரூபாய் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சத்தீஸ்கர் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜூலை 2020 இல் ஹரேலி திருவிழாவில் கோதன் நியாய் யோஜனா திட்டத்தை தொடங்கியது.

கோதன் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிக்க பசுவின் சாணத்தை கிலோ ஒன்றுக்கு, இரண்டு ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்கிறது. கடந்த இரண்டு வருடங்களில், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மட்டும் 20 லட்சம் குவிண்டால்களுக்கு மேல் மண்புழு உரம், சூப்பர் கம்போஸ்ட், சூப்பர் பிளஸ் உரம் ஆகியவை பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு, 143 கோடி ரூபாய் வருவாய் அரசு எட்டியுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ், 150 கோடி ரூபாய்க்கு மேல் பசுவின் சாணம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பசுவின் கோமியத்தையும் சதீஷ்கர் அரசு கொள்முதல் செய்ய உள்ளது.

த்தில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.143 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கோதன் நியாய் யோஜனா திட்டத்தில் சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு பசுவின் கோமியத்தை லிட்டர் நான்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டமானது ஜூலை 28-ஆம் தேதி மாநிலத்தில் நடைபெறவுள்ள ஹரேலி திருவிழா அன்று தொடங்க உள்ளது.

முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கால்நடை காப்பகங்கள் மூலம் பசுவின் கோமியத்தை அரசு கொள்முதல் செய்ய உள்ளது. பசுவின் கோமியத்தை குறைந்தபட்சம் லிட்டருக்கு நான்கு ரூபாய் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சத்தீஸ்கர் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜூலை 2020 இல் ஹரேலி திருவிழாவில் கோதன் நியாய் யோஜனா திட்டத்தை தொடங்கியது.

கோதன் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிக்க பசுவின் சாணத்தை கிலோ ஒன்றுக்கு, இரண்டு ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்கிறது. கடந்த இரண்டு வருடங்களில், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மட்டும் 20 லட்சம் குவிண்டால்களுக்கு மேல் மண்புழு உரம், சூப்பர் கம்போஸ்ட், சூப்பர் பிளஸ் உரம் ஆகியவை பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு, 143 கோடி ரூபாய் வருவாய் அரசு எட்டியுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ், 150 கோடி ரூபாய்க்கு மேல் பசுவின் சாணம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பசுவின் கோமியத்தையும் சதீஷ்கர் அரசு கொள்முதல் செய்ய உள்ளது.

Baskar

Next Post

மகனின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொன்ற கொடூர தந்தை..! சண்டையில் தலையிட்டதால் சம்பவம்..!

Tue Jul 19 , 2022
பெற்ற மகன் என்றும் பாராமல் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு அர்ஜூனன் (14) என்ற மகனும் லதா, நந்தினி என்ற இரண்டு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கணவன் குமார், மனைவி சுமதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தில் குமார் தனது […]

You May Like