சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரவணன்(42 வயது) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவியும் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் , வழக்கம் போல் நேற்று காலை சரவணன் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மாணவிகளுக்கு கணித வகுப்பும் எடுத்து கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி வகுப்பிலேயே கீழே விழுந்தார்.
இதனை கண்டு அவருடன் பணிபுரிந்த சக ஆசிரியர்கள், சரவணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது, சரவணனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறினார். இந்த செய்தி அங்குள்ள அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.