தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் இளைய தளபதி விஜய் கூட்டணியில் உருவான திரைப்படம் வாரிசு தில் ராஜு தயாரித்த இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு, சியாம், ஸ்ரீகாந்த் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
கலவையான விமர்சனங்கள் பொதுமக்களிடையே காணப்பட்டாலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சரத்குமாரின் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் சரத்குமார் ஏற்று நடித்திருந்த நடிகர் விஜயின் அப்பா கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. இதற்காக அவர் 2 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வாங்கி இருக்கிறார் என்று தகவல் கிடைத்திருக்கிறது