பெண்கள் மற்றும் குழந்தைகள் நிச்சயமாக அனைத்து சமயங்களிலும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வந்தாலும், அவர்கள் அதனை சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன.
ஒரு பெண்ணையோ அல்லது சிறுமியையோ பலாத்காரமான முறையில் வலுக்கட்டாயமாக பாதியில் உறவில் ஈடுபடுவது குற்றம் என்றாலும், மறுபுறம் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களுடைய விருப்பத்துடன் ஒரு சில நபர்கள் அந்த சிறுமிகளின் வாழ்வை சூனியமாக்கி விட்டு சென்று விடுகிறார்கள்.
எப்படிப்பட்ட நபர்களிடமிருந்து தான் சிறுமிகளும், பெண்களும் நிச்சயமாக எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் விலகியே இருக்க வேண்டும் என்று பலர் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேர்ந்த (14) வயது சிறுமி அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அப்போது அதே பகுதியை சார்ந்த மதுபாலன்( 34) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். அத்துடன் தனிமை கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் எல்லை மீறி பழகியதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், அந்த மாணவி கடந்த சில தினங்களாகவே சோர்வுடன் இருந்து கொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றன. இதை கேட்டு மேலும் அதிர்ந்து போன பெற்றோர், இது தொடர்பாக சிறுமியிடம் அப்போது நடந்தவற்றை தெரிவித்து சிறுமி கதறி அழுதிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் வழங்கியுள்ளனர். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு மதுபாலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.