சட்டப்பேரவையில் வினா விடைகள் நேரத்தில் மதுரையில் எந்த தொழிலும் இல்லாத சூழ்நிலையில், மெட்ரோ வந்து என்ன பயன்? என்றும் தொழிற்பேட்டை அரபியுங்கள் மதுரையின் மக்கள் ஆகா ஓகோ என்று பாராட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அப்போது திடீரென்று குறுக்கிட்ட சபாநாயகர் 10 வருட கால அதிமுக ஆட்சியில் செய்யாததை தற்போது செய்தீர்களா என்று கேள்வி எழுப்புவதாக கூறினார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை உண்டானது.
இதற்கு பதிலளித்து உரையாற்றிய மாநில தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களே அண்ணனை பார்த்து ஆஹா, ஓஹோ என்று தெரிவிப்பதாகவும், மதுரையில் மாடு தான் படிப்பார்கள் ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அவருடைய வீரம் புலியின் வாயை பிடிக்காமல் வாலை மட்டும் பிடித்ததில் தெரிவதாகவும் கூறியதால் சட்டப்பேரவையில் மறுபடியும் சிரிப்பலை உண்டானது.
அதோடு தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைட்டில் பார்க் அமைப்பதற்கு முதல்வர் அறிவித்திருப்பதோடு, சிப்காட் தொழிற்சாலை வருவதற்கும் அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறார் என்று கூறினார்.
அதோடு மக்களிடம் சமச்சீரான தொழில் வளர்ச்சி எல்லா மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார் எனவும், அதிகமான முதலீடுகள் தென் மாவட்டங்களை நோக்கி வர உள்ளதால் மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டையில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.