fbpx

40 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த: அரசு பள்ளி ஆசிரியரின் மன்மத லீலைகள்..!

பெங்களூரு கொப்பல் மாவட்டம் கரடகி டவுனை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (42). இவர் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் பள்ளிக்கு தினமும் கரடகியில் இருந்து வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியர் வேலை பார்த்து வந்த முகமது அவருடன் வேலை பார்த்த ஆசிரியை, மாணவிகள், மேலும் அக்கம்பக்கத்து பெண்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சிலரை மிரட்டி உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில், முகமது அசாருதீன் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முகமது அசாருதீன் தப்பி ஓடி ஒளிந்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கரடகி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், முகமது அசாருதீன் தன் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம்‌ பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், பக்கத்துவீட்டில் உள்ள பெண்கள் என 40-க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், சிலருடன் நெருக்கமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கோவாவில் பதுங்கியிருந்த அவரை நேற்று கரடகி காவல்துறையினர் கைது செய்தனர். அவரை கரடகிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு உதவிகோரிய பரிதாபம்..!

Mon Jul 4 , 2022
பாட்னா பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை பதிவிட்டு‌உதவி கேட்டாள்ளார். அந்த சிறுமி வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் சொல்லியுள்ளார். தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்பதாகவும், பல ஆண்கள் தான்னை பலாத்காரம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கூறினார். மேலும் […]

You May Like