ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வருபர் சண்முகம் (54). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இருவரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு பெண் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மற்ற இரண்டு பெண்களும் படித்து வருகின்றனர்.
ஈரோடு நாராயணவலசு திருமால்நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவருடைய மனைவி காந்திமதி (40). காந்திமதிக்கு தமிழ்ச்செல்வி அக்கா முறையாகும். சரவணன், காந்திமதி இருவரும் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு சண்முகத்துக்கு சம்பத் நகரில் வீடு ஒதுக்கீடு கிடைத்ததால், சரவணன் தனது குடும்பத்துடன் அங்கு குடியேறினார். இவர்கள் அனைவரும் தூய்மை பணியாளர்கள் என்பதால் அதிகாலையில் 5.30 மணிக்கு வேலைக்கு கிளம்பி விடுவார்கள். சண்முகமும், காந்திமதியும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் தினமும் அவருடைய மோட்டார் சைக்கிளில் காந்திமதி சென்று வருவார். இதனால் இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. ஒரே இடத்தில் பணி செய்ததால் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் எப்பொழுதும் போல் அதிகாலையில் சண்முகமும், காந்திமதியும் வேலைக்கு சென்றனர். பின்னர் காலை 10.30 மணிக்கு ஈரோடு சத்தி ரோடு வீரபத்திரா தெருவில் இருக்கும் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மறுநாள் காலை 10.30 மணி வரை தான் அறை எடுத்திருந்தனர். இதனால் மதியம் ஒரு மணி அளவில் லாட்ஜில் வேலை செய்பவர் இவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால் அறையின் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதனால் ஜன்னல் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருந்த கருப்பு ஸ்டிக்கரை கிழித்து பார்த்துள்ளார். அப்போது சண்முகமும், காந்திமதியும் எந்தவித அசைவுமின்றி உடம்பில் துணி இல்லாமல் கிடந்துள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் மேனேஜர் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் தகவல் சொன்னார். அதன்பேரில் ஈரோடு காவல்துறையினர் அங்கு வந்து கதவை திறந்து பார்த்தனர், அப்போது சண்முகமும், காந்திமதியும் இறந்து கிடந்தனர். மேலும் அவர்கள் அருகில் பீர் பாட்டில் மற்றும் எலிபேஸ்ட் மருந்து (விஷம்) இருந்தது. காவல் துறையினர் விசாரணையில், சண்முகமும், காந்திமதியும், இங்கு வந்து அறை எடுத்து தங்கி உள்ளனர். பிறகு இரண்டு பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர். தங்கள் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து இரண்டு பேரும் பீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.