fbpx

தலிபான் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை: உலக நாடுகள் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம்..!

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளுக்கு தலீபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தலீபான் தீவிரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தனர். அப்போது முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைநகர் காபூலில் நடைபெற்ற இஸ்லாமிய மதகுருக்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆப்கானிஸ்தானின் மூத்த மத தலைவர் மவுலாவி ஹெபதுலா அகுந்த்ஸாதா, சுதந்திரமாக இல்லாமல் வளர்ச்சியடைய முடியாது. கடவுளுக்கு நன்றி, நாங்கள் இப்போது ஒரு சுதந்திர நாடாக இருக்கிறோம். எங்களுக்கு மற்ற நாடுகள் உத்தரவுகளை வழங்கக்கூடாது. இது எங்கள் அமைப்பு, எங்களுக்கென்று எங்கள் சொந்த முடிவுகள் உள்ளன என கூறினார்.

Baskar

Next Post

’போதைப் பொருளை உபயோகித்துவிட்டு வகுப்பறைக்கு செல்லும் மாணவர்கள்’..! - அன்புமணி ராமதாஸ் வேதனை

Mon Jul 4 , 2022
பள்ளி, கல்லூரி மாணவர்களைப் போதை பழக்கத்திலிருந்து வெளிகொண்டு வர, அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகப் போதை பழக்கம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகப் பள்ளிக்கூடங்களில் கூட இந்த போதை பழக்கம் உள்ளதைப் பார்க்க முடிகிறது. போதைப் பொருட்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி வாசல்களில் அதிகம் […]

You May Like