fbpx

டியூஷன் சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது…!

ஆந்திர மாநிலம் ராய்சோட்டி பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பகுதியில் அபிராம ரெட்டி என்பவர் ஒரு வீட்டை வாடகை எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அபிராம ரெட்டியிடம் டியூசன் சேர்ந்தார். அப்போது அந்த மாணவியிடம் அபிராம ரெட்டி உன்னை 10-ம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருக்கமாக பழகி யுள்ளார்.

அவரிடம் டியூசன் படிக்கும் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு, பிறகு அந்த சிறுமியிடம் சிறப்பு வகுப்பு எடுக்கிறேன் எனக்கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். தொடர்ந்து 7 மாதங்களாக அபிராம ரெட்டி அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்திருந்துள்ளார். இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் 10-ஆம் வகுப்பு தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் மாணவி இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதுகுறித்து அந்த மாணவியிடம் அவரது பெற்றோர்கள் கேட்டபோது, டியூசன் நடத்தும் ஆசிரியர் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறியதால் சரியாக படிக்கவில்லை என்றும் அவர் தொடர்ந்து பாலியில் தொல்லை கொடுத்ததால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ராய்ச்சோட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சுதாகர்ரெட்டி வழக்கு பதிவு செய்து அபிராமரெட்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Baskar

Next Post

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டதால் மற்றொரு கொலை.. தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை...

Sat Jul 2 , 2022
கடந்த 28-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த தையல்கடை காரர் கன்னையா லால் என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.. முகமது நபியைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்கு பழிவாங்குவதற்காக அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக குற்றவாளிகள் வீடியோ வெளியிட்டனர்.. குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இது குறித்து தேசிய […]

You May Like