fbpx

திருடப் போன இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன்..! கடலூரில் பரபரப்பு..!

கடலூர் வண்ணார்பாளையத்தை சேர்ந்த 47 வயதான அரசு ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை மூடாமல் வரண்டாவில் படுத்து தூங்கியுள்ளார். மேலும் அவரது மூத்த மகன் வீட்டில் உள்ள ஒரு ரூமிலும் அவரது இரண்டாவது மகள் கல்லூரி மாணவி, வராண்டாவிலும் தூங்கி உள்ளனர். இந்நிலையில் நடு இரவில், அந்த வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே வந்த 15 வயது சிறுவன் ஒருவன், அந்த வீட்டின் உள்ளே திருடுவதற்கு நகை பணம் ஏதாவது இருக்கிறதா, என்று வீடு முழுவதும் தேடி பார்த்து உள்ளான். அந்த வீட்டில் அப்படி ஏதும் நகை பணம் இல்லாததால், வீட்டில் இருந்து வெளியே செல்ல நினைத்தபோது, வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை பார்த்த சிறுவன் அவரை பலாத்காரம் செய்ய முயன்று உள்ளான்.

மாணவியின் வாயை பொத்தி பலாத்காரத்திற்கு முயன்ற போது, அந்த பெண் சத்தம் போட்டு கத்தியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டவுடன், அவரது தந்தை எழுந்து அந்த சிறுவனை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் சிறுவன் தப்பித்து ஓடி விட்டான். மேலும் அவனுடன் வீட்டிற்கு வெளியே இன்னும் இரண்டு சிறுவர்கள் இருந்துள்ளனர். அவனுடன் சேர்ந்து அவர்களும் தப்பித்து ஓடியுள்ளனர். இது குறித்து அரசு ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவனாம்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் தேவனாம்பட்டினம் முனீஸ்வரன் கோயில் அருகே, நின்று கொண்டிருந்த சிறுவனை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்பொழுது அந்த சிறுவன் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்தவன் என்றும், அவன் தான் நேற்று அந்த அரசு ஊழியர் வீட்டில் புகுந்து திருட முயற்சி செய்தது. மேலும் அங்குள்ள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், அந்த சிறுவன் தான் என்று தெரியவந்தது. இதை அடுத்து அந்த சிறுவனை கைது செய்த காவல்துறையினர், அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் தலைமறைவான இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

Thu Jul 7 , 2022
உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]

You May Like