fbpx

பிரிந்து போன கணவருடன் ஜாயிண்ட் அடித்த காதலிக்கு, சூப்பர் கிப்ட் அனுப்பிய காதலன்…!

சென்னை கொளத்தூரில் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து‌ வரும் 28 வயது இளம்பெண், அவருடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கொளத்தூர் அண்ணா சிலை பகுதியில் உள்ள ஒரு பிரவுசிங் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.   அந்த கடையின் உரிமையாளர் அருணாச்சலமும்(28) என்கிற வாலிபரும் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் அருணாச்சலத்துடன் நெருங்கி பழகி வந்தார் அந்தப்பெண். இந்நிலையில், இருவரும் அடிக்கடி வெளியே சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். அருணாச்சலத்தை திருமணம் செய்துகொள்ள போவதாக அந்தப்பெண் சொல்லி வந்திருக்கிறார். இதனால் அவ்வப்போது அந்த பெண்ணின் குடும்ப செலவுக்கு அருணாச்சலம் பண உதவிகள் செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் பிரிந்து போன அந்த பெண்ணின் கணவர் மீண்டும் அந்த பெண்ணை வந்து சந்தித்துள்ளார் இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்கிறாயே என்று சண்டை போட்டுள்ளார். இதனால் அந்த பெண் அருணாச்சலத்தின் பிரவுசிங் சென்டருக்கு வேலைக்கு வருவதை நிறுத்தி ‌கொண்டார். இதனால் அருணாச்சலம் மேலும் ஆத்திரமடைந்தார்.

இதனால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்பெண்ணின்  கணவருக்கும் அவரது உறவினர்களுக்கும் அனுப்பி வைத்தார் அருணாசலம்.  இதனால்  அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அருணாச்சலம் மீது புகாரளித்தார். எனவே, போலீசார் அருணாச்சலத்தை கைது செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.
 

Baskar

Next Post

ரேஷன் அட்டையில் திருத்தம்...! இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!

Sat Jul 9 , 2022
பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஜூலை-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் […]

You May Like