fbpx

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை சொந்த தங்கையே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடூரம்…..!

பெங்களூருவின் ஜிகாணியில் இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் 3 பைகளில் அடைக்கப்பட்டு 3 வெவ்வேறு பகுதிகளில் வீசப்பட்ட சம்பவம் எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபரின் தலை மற்றும் கிடைக்கவில்லை இந்த கொடூரமான கொலை தொடர்பாக விசாரித்து வந்த பெங்களூரு காவல்துறை தற்போது இந்த கொலையை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை அன்று பாக்யஸ்ரீ மற்றும் அவருடைய காதல் கணவர் சிவபுத்திரா என்ற இருவரை காவல்துறை கைது செய்து இந்த கொலை வழக்கின் மர்மத்தை முடித்து வைத்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட இளைஞர் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கராஜு சித்தப்பா பூஜாரி இவரை சொந்த தங்கையே தன்னுடைய காதலருடன் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்.

பாக்கியஸ்ரீயும் சிவபுத்திராவும் விஜயபுரா மாவட்டத்தில் கல்லூரி படித்துக் கொண்டிருந்த நாட்கள் முதலே நண்பர்களாக இருந்து வந்தார்கள். நாளடைவில் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இந்த நிலையில், இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 2015 ஆம் வருடம் பெங்களூருக்கு சென்று ஜிகானி அருகே உள்ள வதேரமஞ்சனஹள்ளி பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். தொழில் பேட்டையில் பாக்யஸ்ரீயின் காதலன் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதே தொழில் பேட்டையில் தான் பாக்யஸ்ரீ தன்னுடைய காதலருடன் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில், ஒரு நாள் பாக்யஸ்ரீயின் சகோதரரான லிங்கராஜு வீட்டிற்கு வந்து சிவபுத்திராவுடன் தன்னுடைய தங்கைக்கு இருக்கும் உறவை தெரிந்து கொண்டபோது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் பாக்கியஸ்ரீ, சிவபுத்திரா இருவரின் உறவுக்கும் லிங்கராஜ் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார். ஆகவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சிவபுத்திரனும், பாக்யஸ்ரீயும் லிங்கராஜுவை கொலை செய்து விட்டார்கள்.

ஆத்திரம் காரணமாக, செய்த கொலையை மூடி மறைப்பதற்கு நினைத்த பாக்யஸ்ரீ, சிவபுத்திரா உள்ளிட்ட இருவரும் லிங்கராஜ் உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு பைகளில் அடைத்து கைகளை அடைத்த பையை ஓர் இறைச்சிக்கடை அருகே வீசிச்சென்றன. மற்றொரு பையை அருகே உள்ள ஏரியில் எரிந்து விட்டனர். என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ஆகவே பாக்யஸ்ரீ, சிவபுத்திரா இருவரும் தற்சமயம் தங்களுடைய பெயர் போன்ற அடையாளங்களையும் மாற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின் பெயரில் நாசிக் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் இருவரையும் பயிற்சி செய்து தங்கள் ஊருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Post

”உனக்கு கல்யாணமே ஆனாலும் என்கூட தான் பண்ணனும்”..!! நிச்சயிக்கப்பட்ட முன்னாள் காதலியை மிரட்டி உல்லாசம்..!!

Mon Mar 20 , 2023
ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் கோசனம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட நிலையில், திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மாயமான இளம்பெண் திடீரென வீடு திரும்பினார். இதையடுத்து, அந்த […]

You May Like