fbpx

பத்தாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம், சக மாணவர்கள் செய்த அட்டூழியம்…!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்‌ மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வில் தோல்வியடைந்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தன்னுடன் படைத்த மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியும் கலந்து கொண்டார். விழாவில், கேக் வெட்டிய போது, பிறந்தநாள் கொண்டாடிய மாணவர், மாணவியுடன் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், மாணவியின் வகுப்பில் படித்து வரும் ஆவினங்குடியை சேர்ந்த ஒரு மாணவர், அந்த மாணவியிடம் பிறந்தநாள் விழாவில் கொடிக்களத்தை சேர்ந்த மாணவருடன் நீ எடுத்த புகைப்படம் என்னிடம் உள்ளது, உனது வீட்டில் கொடுத்துவிடுவேன் என்று கூறி மிரட்டினார். இதை உன் வீட்டில் தரக்கூடாது என்றால் நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வர வேண்டும் என்று தெரிவித்தார். அதன்பேரில் கடந்த 1 ஆம் தேதி, பள்ளி உணவு இடைவேளையின் போது அந்த மாணவி, பள்ளியின் பின்பகுதியில் உள்ள அந்த மாணவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த வீட்டுக்குள் மாணவி சென்றவுடன், மிரட்டல் விடுத்த அந்த மாணவர் உள்பக்கமாக கதவை பூட்டியதால், வீட்டுக்குள் சிக்கிய அந்த மாணவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மேலும், உள்ளே பத்தாம் வகுப்பு படித்து வரும் மேலும் இரண்டு மாணவர்கள் இருந்தனர். தொடர்ந்து அந்த மூன்று மாணவர்களும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அந்த மூன்று மாணவர்களும் தாங்கள் எடுத்த வீடியோவை சென்னைக்கு வேலைக்காக சென்ற கொடிக்களத்தை சேர்ந்த மாணவருக்கு அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவரிடம் சாதாரண வகை செல்போன் இருந்ததால், அவருடன் இருக்கும் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த மற்றொருவரின் செல்போனுக்கு அனுப்பி கொடிக்களம் மாணவருக்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலானது. இதையடுத்து இந்த வீடியோ விவகாரம் மேலும் ஒரு மாணவருக்கு தெரிந்ததால். அந்த மாணவரும், மாணவியிடம் சென்று தன்னிடம் வீடியோ உள்ளது என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். மேலும் இனி பள்ளிக்கு படிக்க போகமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாய், ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் அவர்களது செல்போனை சோதித்த போது அதில் மாணவியின் புகைப்படம் மற்றும் வீடியோ இருந்தது. இதையடுத்து ஆவினங்குடியை சேர்ந்த மூன்று மாணவர்கள் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்ததாக கொடிக்களத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் என நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே கைதான நான்கு பேரும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

Baskar

Next Post

தொழில் மற்றும் கல்விக்கடன் வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே..!

Fri Jul 8 , 2022
கல்வி மற்றும் தொழில் கடன் பெற, சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப […]

You May Like