அண்ணனை அடித்து விரட்டி… மழைக்கு ஒதுங்கிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், தனது சகோதரருடன் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, அந்த சிறுமையும் அவரது சகோதரரும் பேருந்தில் இருந்து இறங்கும் போது அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த சில பேர், அவர்களிடம் அருகில் இருந்த பள்ளி கட்டிடத்தில் தங்கிவிட்டு, மழை நின்றவுடன் செல்லுங்கள் என்று அவர்கள் இருவரிடமும் கூறியுள்ளனர்.

இரவு நேரம் என்பதால், அவர்கள் கூறியபடி பள்ளிக்கு சென்று அங்கு தங்கியுள்ளனர். இந்நிலையில் அன்று நள்ளிரவு பள்ளிக்கு திரும்பி வந்த அந்த ஐந்து பேரும், சிறுமியின் சகோதரரை அடித்து விரட்டிவிட்டு . அவர்கள் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத சிறுமி, அவர்களிடமிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது, பள்ளி கட்டிடத்தின் மாடிக்கு ஓடிச்சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதற்கிடையே அந்த சிறுமியின் அண்ணன் சத்தம் போட்டு கத்தியதால், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர் அப்பகுதிக்கு ஒடி வந்தனர்.

அதன் பிறகு அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர், அந்த கிராமத்திற்கு சென்று, அந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் குற்றவாளிகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து குதித்ததில் சிறுமி படுகாயமடைந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Baskar

Next Post

’நிர்வாகம் செய்ய தெரியாமல் மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசு’..! ஜெயக்குமார் கடும் தாக்கு

Tue Jul 19 , 2022
”தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது மனித உரிமைகளை மீறி செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணையில் இன்று அவர் ஆஜரானார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த […]
’எங்க விஷயத்துல நீங்க மூக்கை நுழைக்காம இருந்தாலே போதும்’..!! ஜெயக்குமார் காட்டம்..!!

You May Like