திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள செவ்வத்தூர் புதூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ், ராமரோஜா தம்பதியர்களின் மகன் ஏழுமலை. இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குனிச்சி பகுதியைச் சேர்ந்த அம்சா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஏழுமலை சென்னையில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த புதன்கிழமை இரவு செல்வராஜ் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார் இந்நிலையில் செல்வராஜின் மனைவி ராமரோஜா வீட்டின் வெளியே படுத்து உறங்கியுள்ளார். ஏழுமலையின் மனைவி அம்சாவும், குழந்தைகளும், வீட்டிற்கு உள்ளே படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் ராமரோஜா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கந்திலி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று ராமரோஜாவின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். சந்தேகத்தின் பெயரில் செல்வராஜ் மனைவி அம்சா மற்றும் பெரிய குனிச்சியை சேர்ந்த அவரது உறவினர் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் பள்ளி பருவத்தில் இருந்து கார்த்தியும் அம்சாவும் காதலித்து வந்துள்ளனர். அம்சாவின் பெற்றோர் அவரை ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அம்சாவிற்கு திருமணம் ஆன பின்னரும் கார்த்திகேயனும் அம்சாவும் அவர்களது கள்ள காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இதனை அறிந்த அவரது மாமியார் அம்சாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்சா, கார்த்திகேயன் மற்றும் அவரது சகோதரரான, பதினேழு வயதான சிறுவனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு, ராமரோஜாவின் கழுத்தை கம்பியால் நெறித்துக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை தொடர்ந்து கந்திலி காவல்துறையினர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கார்த்திகேயன் அம்சா இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பள்ளியில் சிறுவனை அடைத்தனர்.