fbpx

ஆயுர்வேத சிகிச்சையில் இருந்த தொழிலதிபரை நிர்வாணமாக்கி…பணம் பறிக்க திட்டம் போட்ட கும்பல்…!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வருபவர் 63 வயது தொழிலதிபர். கடந்த 11-ந் தேதி இவர் காந்திபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஆயுர்வேத சிகிச்சைக்காக ஒரு பெண்ணுடன் தங்கியிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மூன்று பேர் கொண்ட ரவுடிக் கும்பல் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அறைக்குள் இருந்த இருவரையும் நிர்வாணமாக்கினர், பின்னர் தொழில் அதிபரையும், அந்த பெண்ணையும் மிரட்டி, பிறகு அவர்கள் இரண்டு பேரையும் நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் வீடியோவும் எடுத்தனர்.

அதன் பிறகு, அந்த வீடியோவை காட்டி இதனை உங்கள் குடும்பத்தினருக்கும், வெளி உலகத்தினருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ஐந்து லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று மிரட்டினர். தற்போது என்னிடம் பணம் இல்லை என தொழில் அதிபர் கூறியுள்ளார். உடனே அவர் கையில் இருந்த ஆயிரம் ரூபாய் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பிறகு நாங்கள் கேட்கும்போது எங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பணம் வர வேண்டும் எனக்கூறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மிரட்டலுக்கு ஆளான அந்த தொழிலதிபர் அருகில் இருக்கும் காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

மேலும் தொழிலதிபருடன் தங்கியிருந்த பெண்ணுக்கும், அந்த மோசடி கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், தொழிலதிபரிடம் அதிக பணம் இருப்பதை தெறிந்து கொண்ட அந்த பெண், சரியான நேரம் பார்த்து அந்த கும்பலை அங்கு வரச்சொல்லி தங்கள் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே தொழிலதிபருடன் சென்ற பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும், அந்த பெண்ணை பிடித்தால் உண்மை வெளியே வரும் என காவல்துறையினர் நம்புகின்றனர். இதனால் அந்த பெண்ணை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொழிலதிபர் தங்கியிருந்த ஓட்டலில் பதிவாகி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் சோதனை செய்து குற்றவாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா என பார்த்து அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடி கும்பல் இதேபோல் பல தொழில்அதிபர்களை மிரட்டி பணம் பறித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

பெட்ரோல் விலை ரூ.5 குறைப்பு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு...

Thu Jul 14 , 2022
மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ.100-க்கும் மேல் தலைநகர் டெல்லி, மத்தியப்பிரதேசம், தமிழகம், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், சாமானிய மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் […]

You May Like