உத்தரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால், மனைவியை கோடரியால் கழுத்தையறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள கார்பரா கிராமத்தில் செக்டர்-36 பகுதியைச் சேர்ந்த காஜல் என்பவரை ரவி என்ற இளைஞர், இந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே ரவி காஜலிடம் வததச்சனை கேட்டு பிரச்சினை செய்துள்ளார். திருமணத்தின் போது பெண் வீட்டார் தங்களின் தகுதிக்கு மீறிய அளவு அதிகமான வரதட்சணை கொடுத்துள்ளனர், ஆனாலும் ரவியும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து, பைக் மற்றும் பணம் கேட்டு காஜலை கொடுமைப்படுத்தி உள்ளனர். மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுமை செய்வதாக காஜல் தன்னுடைய வீட்டில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து ரவிக்கும் காஜலுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு நடந்த பிரச்சனையில் ரவி கோடரியால் காஜலை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், ரவியை கைது செய்தனர். காஜலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.